Sports | விளையாட்டு
இதுவே சிறந்த ஐபிஎல் சீசன்- கோலி சொல்லிய காரணம்! சிஎஸ்கே டீம்மை தான் தாக்குகிறாரோ
லேட்டாக தொடங்கினாலும் UAE யில் ஐபிஎல் 2020 புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களுரு என அனைவரும் எதிர் பார்த்த டீம்கள் பிளே ஆப் நுழைந்தது. கொல்கத்தா வரும் என எதிர்பார்த்த சூழலில் ஹைதெராபாத் டீம் கடைசி வாரத்தில் கலக்கலாக விளையாடி தகுதி பெற்றது.
இன்று டெல்லி டீமுடன் இரண்டாவது குவாலிபயர் ஆடுகிறது. முதல் போட்டியில் பெங்களூரு டீம்மை வீழ்த்தியது. இந்த போட்டி முடிந்த பின் விராட் கோலி தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு பேசினார். அப்பொழுது அவர் சொன்ன இந்த விஷயம் அனைவரது ஆதரவையும் பெற்றது.

virat-kohli-ipl
“இந்த வருடம் மிகவும் கடினமானதாக இருந்தது. ஐபிஎல் இல் உள்ள டீம்களின் தரத்தை இது காமித்துள்ளது. உள்ளூர், வெளியூர் என்ற (HOME /AWAY ) நிலை கிடையாது, எனவே அனைவரும் சமமே. உணமையான டீம்களின் திறன் மற்றும் பலம் வெளியே வந்தது. எனவே இதுவே சிறந்த போட்டியாக அமைந்தது. இதுபோன்ற அருமையான சூழலில் வந்து விளையாடும் வாய்ப்பு அம்சமாக அமைந்தது.”
இவ்வாறு கோலி கூறினார். மறைமுகமாக சி எஸ் கே போன்ற டீம், சென்னையில் ஆடுகளத்தை தங்களுக்கு ஏற்ற மாதிரி அமைத்து எளிதில் வெற்றிகளை குவிப்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
