இலங்கை அணி இந்தியாவில்  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. இந்நிலையில், நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி யின் நான்காவது நாள்  நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா இன்னிங்ஸ்  வெற்றி பெற 9 விக்கெட் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நேரத்தில் நாம் இப்போட்டியின் பொழுது நடந்த இரண்டு சம்பவங்களை பற்றி பார்ப்போம்..

முதல் டெஸ்ட்-கொல்கத்தா: விராட் கோலி

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை விறு விறுப்பாக ஆகியதில் பெரும் பங்கு  விராட் கோலிக்கு  உண்டு. ஜடேஜா,அஸ்வின் 7,  சாஹா 5, புவனேஷ்வர் குமார் 8 ரன்களில் என்று  சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் , விராட் கோலி நிலைத்து நின்று ஆடி, ரன்கள் சேர்த்தார்.சிறப்பாக விளையாடி சதம் அடித்து இலங்கை அணிக்கு தோல்வி பயத்தை உருவாக்கினார்.

முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் கொலக்த்தாவில் உடல் ஊனமுற்ற தனது ரசிகர் ஒரு வரை சந்த்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Making fans happy ❤️?

A post shared by Indian Cricket Team ? (@cricket.freak) on

மிக பெரிய சூப்பர்ஸ்டார் ஆன இவர் தன ரசிகர் ஒருவருக்காக செய்த இந்த செய்கையை, நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இரண்டாவது டெஸ்ட்-  நாக்பூர்: ரோஹித் சர்மா

இலங்கையுடனான  2-வது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிகார் தவானுக்கு பதிலாக முரளி விஜய்யும்,

கல்யாணம் காரணமாக விடுப்பில் உள்ள புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ரோகித் சர்மாவும், காயம் காரணமாக  முகமது ‌ஷமி இடம் பெறவில்லை. அவருக்கு பதில் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வுசெய்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் நடந்த பொழுது சிறிய இடைவெளி கிடக்கும்பொழுதெல்லாம் ரோஹித் சர்மா  மைதானத்தில் கீழ் இறங்கி வந்த ஸ்பைடர் கேமராவுடன் விளையாடினார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

What’s up Hitman? @rohitsharma45

A post shared by Team India (@indiancricketteam) on

பல  நாட்களுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததை பயன் படுத்திக்கொண்டு சதம் எடுத்தார் ரோஹித்.  கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடிக்க, முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

பந்துவீச்சில் பொழுது விளையாட்டுத்தனமாக இருந்தாலும், பேட்டிங்கில் அசத்திவிட்டார் ஹிட் மேன் ரோஹித் சர்மா.