இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லிக்கு உண்மையான சோதனை காலம் துவங்கிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி மீது கடும் விமர்சணங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் “

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மிகச்சிறப்பாக செயல்பட்டது. என்னைப்பொறுத்தவரையில் இந்திய கேப்டன் கோஹ்லிக்கு உண்மையான சோதனைக்காலம் துவங்கிவிட்டது. அதனால் இதில் இருந்து அவரே தான் மீண்டு வரவேண்டும். இதுவரை அவரது தோளில் தான் இந்திய அணி வென்றது என்பது தற்போது தெளிவாகிவிட்டது. இனி அவருக்கு வீரர்களின் ஆதரவு தேவை. உலகில் வெற்றிகரமாக இருந்த எல்லா கேப்டன்களும் இதையே தாரகமந்திரமாக வைத்து சாதித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.