மும்பை இந்தியன்ஸ் வீரர் க்ரூணல் பாண்டியா வலியால் துடித்து கொண்டிருந்தபோது பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி சிரித்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியை அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி துரத்தி கொண்டிருந்தபோது, 14வது ஓவரை எதிர்கொண்ட மும்பை வீரர் க்ரூணல் பாண்டியா அந்த ஓவரின் ஒரு பந்தை விராத் கோஹ்லியை நோக்கி அடித்தார், அந்த பந்து பவுண்டரி லைன் வரை  சென்றிருந்த போதிலும் இடுப்பு வலியால் அவதிப்பட்ட க்ருணல் பாண்டியாவால் ரன் ஓட முடியவில்லை.

கோஹ்லி அந்த பந்தை வீசுவதற்குள் ஒருவழியாக அந்த ரன்னை நிறைவு செய்த பாண்டியா இடுப்பு வலியால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார், அதனை தொடர்ந்து அவர் பாதிலேயே போட்டியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது க்ருணல் பாண்டியா வலியால் துடித்து கொண்டிருந்தபோது விராத் கோஹ்லி சிரித்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/7asSumit/status/859042266400280578