Sports | விளையாட்டு
நெட்ஸில் அவரது ஆட்டத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன். விராட் கோலி பாராட்டும் வீரர் யார் தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் நாடாகும் போட்டிகளில் சொதப்பும் என்ற நிலையை இருந்தது ஒரு காலகட்டத்தில். இந்நிலையில் விராட் தலைமையில் இந்த அணி உள்ளூர் – வெளியூர் டி 20, டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் என அனைத்திலும் அசதி வருகின்றனர். ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் நியூஸிலாந்து சென்ற டீம் அங்கு தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வென்று இந்த தொடரையும் ஜெயித்துள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் கோலிக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் இல்லாத சமயத்தில் ரோஹித் கேப்டேன்.

indian-team-win
ஷுபம் கில்
இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய விராட் வீரர்களின் பயிற்சி மற்றும் கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம் என்றார் மேலும் இளம் வீரர்களையும் பாராட்டினார் .
‘‘சில இளம் வீரர்கள் மிகவும் அபாரமான திறமையை பெற்றுள்ளனர். பிரித்வி ஷா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியில் இடம்பிடித்து விட்டார். ஷுப்மான் கில் மிகவும் அற்புதமான திறமையை பெற்றுள்ளார். வலைப்பயிற்சியின்போது அவரது ஆட்டத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன். நான் 19 வயதில் இருக்கும்போது ஷுப்மான கில் செய்ததில் 10 சதவீதம் கூட செய்ததில்லை.

u19 world cup winner
அவர்கள் இந்திய அணிக்கு வருவது கிரிக்கெட்டிற்கு சிறப்பானது. சிறப்பான தகுதியுடன் இந்திய அணிக்கு வரும்போது, அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாலும், வளர்ச்சி வாய்ப்பு வழங்கப்படுவதாலும் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்’’ என்றார்.
இதனால் 4 வது போட்டியில் கில் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
