fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முட்டை விவகாரம் – கோலியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Sports | விளையாட்டு

முட்டை விவகாரம் – கோலியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

விராட் கோலி கிரிக்கெட் வீரர் என சொல்வதை விட ஒரு பிராண்ட் என்று தான் சொல்ல வேண்டும், நிமிடத்துக்கு லட்சங்களை சம்பாதிக்கும் மனுஷன். இவர் தலைமயில் ஆர் சி பி கோப்பையை வெள்ளாமல் இருக்கலாம், ஆனால் இந்திய டீம் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஜூன் 18 நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய டீம் ஆட உள்ளது. இங்கிலாந்து புறப்படும் முன்பு தனிமை படைத்தும் பயோ பபிளில் டீம் உள்ளது.

கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் செக்ஷனில் பங்கேற்றார். அப்பொழுது இவரது உணவு பற்றி ரசிகர் கேட்க, நம் கேப்டன் சொன்ன பதில் பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

‘உங்களது உணவுமுறை என்ன?’ என்ற கேள்விக்கு .. ‘நிறைய காய்கறிகள், முட்டைகள், காஃபி, பருப்பு, நிறைய கீரை, சில நேரங்களில் தோசை கூட. ஆனால் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில்’ என கோலி பதில் தெரிவித்திருந்தார்.

virat kohli diet

சில ஆண்டுகளுக்கு முன் கோலி, தான் சைவ உணவை பின்பற்றுபவன் (Vegan) என தெரிவித்ததாக குறிப்பிட்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். முட்டை சைவமா அல்லது அசைவமா என்பது பெரிய கேள்விக்குறி தான் என்பது நம்மில் பலருக்கு தெரியும். இதனை கோலி அப்படியே விட்டுஇருந்தால் கூட பரவாயில்லை, அவர் ….

“நான் ஒரு போதும் என்னை ‘Vegan’ என அடையாளப்படுத்தியதில்லை. என்னை எப்போதும் ‘vegetarian’ என்றே குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், காய்கறிகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்” என தன்னை விமர்சித்தவர்களுக்கு கோலி பதில் தந்துள்ளார்.  கோலியின் இந்த பதிலும், சற்று குழப்பத்தை தான் தந்துள்ளது

virat kohli tweet

vegan (நனிசைவம்) என்பவர் விலங்குப் பொருட்களிலிருந்து எந்த உணவையும் சாப்பிடமாட்டார். ஆனால் vegetarian (சைவம்) ஆசாமிகள் தங்களுக்கு ஏற்றது போல மாற்றிக்கொள்வர். பல சைவர்கள் பால் மற்றும் அதன் பொருட்களை பயன்படுத்துவர், இன்னும் ஒரு சிலரோ முட்டை, பால் சேர்த்துக்கொள்வர். இது தான் அதன் விளக்கம் மக்களே.

அட போங்க பாஸ், அவனவனுக்கு எம்புட்டு வேலை இருக்கு, போங்கடா நீங்களும் உங்க பதிவும் என திட்டுவது காதில் விழுகிறது, எனவே இத்துடன் இந்த டாபிக்கை முடிப்போமாக.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top