Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘விராட் கோலி வேற லெவல்’- சொல்கிறார் பிரபல விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்.
அட ஆமாங்க இப்படி ஒரு விஷயத்தை இலங்கை வீரர் குமாரா சங்கக்காரா தான் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய 1 – ௦ என்ற கணக்கில் வென்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்றதன் மூலம் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் சாதனையைச் சமன் செய்துள்ளது. டெல்லி டெஸ்டின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இலங்கையையை சேர்ந்த அஸ்ஸ்ம் அம்மேம் என்ற ரிப்போர்ட்டர் தன் ட்விட்டர் பக்கத்தில்
Kumar Sangakkara’s 2868 runs in 2014 will remain as the highest tally ever recorded in a calendar year as Virat Kohli ends year 2017 with 2818 runs #Cricket
— Azzam Ameen (@AzzamAmeen) December 5, 2017
‘ஒரு வருடத்தில் அதிகம் எடுக்கப்பட்ட ரன்கள் பட்டியலில் 2014 இல் குமார சங்கக்காரா 2868 ரன்கள் தான் உலக சாதனை. விராட் கோலி 2017 ஐ 2818 ரன்களில் முடித்துக்கொண்டார்.’ என்று எழுதினார்.
இதற்கு பதில் சொல்லும் விதமாக சங்கக்காரா தன் ட்விட்டரில்
I don’t think that will last long the way @imVkohli is batting. He will probably overtake it next year and then do it again the year after. He is a different class.
— Kumar Sangakkara (@KumarSanga2) December 6, 2017
‘விராட் கோலி பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்தால், ரொம்ப காலம் இந்த சாதனை தாங்காது. அவர் அடுத்த வருடமே இந்த சாதனையை முறியடிப்பார். பின்னர் அடுத்த வருடமும் அதை விட அதிக ரன்கள் குவிப்பார். அவர் வேற லெவல்.’ என்றார்.
சில நாட்களாகவே விராட் கோலி பல சர்வதேச ரெகார்டுகளை தகர்த்தெறிந்து கொண்டு தான் இருக்கிறார்.
ஜனவரியில் தொடங்கும் தென்னாப்பிரிக்க தொடரைக் கணக்கில்கொண்டு விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதிலாக ரோகித் ஷர்மா, இவ்விரு தொடர்களிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் முடிந்ததும், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விராட் ‘சென்ற முறை எனக்கு ஒய்வு அளிக்கப்பட்ட பொழுது, நாட்களை கடத்துவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், தற்பொழுது உள்ள சூழலில் ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம் என்று தோன்றுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறேன். தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக ஓய்வெடுக்க இதுவே சரியான தருணம்’ என்றார்.
