சூரியகுமார் vs விராட் கோலி பரபரப்பான சண்டை.. களத்தில் மோதிக்கொண்ட முக்கிய காரணம் இது தான்!

2020 ஐபிஎல் சீசன் 48 ஆவது போட்டியில் , மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, மும்பை அணியின் சூரியகுமார் யாதவிடம் வம்பு செய்ததும் ,அதற்கு அவர் தகுந்த பதிலடி கொடுத்ததும் தான் இந்த பரபரப்பு காரணம்.

பெங்களூர் அணி ஆரம்பத்தில் நன்றாக அடித்து ஆடியது ஆனால் கடைசி நேரத்தில் பெங்களூர் அணியால் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பின்னர் ஆடிய மும்பை அணி ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடிய போதிலும், முக்கியமான விக்கெட்டுகளை இழந்து சற்று பின்னடைந்து.

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் வெறும் 43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி வரை களத்தில் நின்று 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெல்வதற்கு உதவியாக இருந்தார்.

மும்பை அணி வெற்றி பெறுவதை உணர்ந்த விராட் கோலி 13வது ஓவரின் போது சூரியகுமார் யாதவ் அடித்த ஒரு பந்தை பீல்டிங் செய்து அவரை நோக்கி முறைத்தபடி வந்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் அப்படியே விராட் கோலியை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தார். இதனால் மைதானம் சற்று பரபரப்பானது .

ஆனால் பொறுமையை கடைபிடித்த சூரியகுமார் யாதவ் தன் நெஞ்சில் கை வைத்து நான் இங்கேதான் இருக்கிறேன் கவலையை விடுங்கள் என்பது போல் சைகை செய்தார்.

suriya-yadav
suriya-yadav