இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா 3-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. நான்காவது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. நேற்றைய போட்டியிலும் வென்றிருந்தால் முதல் முறையாக ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 10 வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கலாம்.இந்திய அணி சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. நான்காவது ஒரு நாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.

இந்த போட்டி முடிந்த பின் கேப்டன் விராட் கோலி பெண்கள் கிரிக்கெட் டீமை சேர்ந்த ஸ்ம்ரிதி மந்தானா, ஹர்மன்பீத்  கவுர், மற்றும் கவிதா பாட்டில் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த போட்டோவை பிசிசிஐ தங்கள் ட்விட்டெர் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளனர்.

 

மித்தாலி ராஜ் தலைமையிலான பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் பைனல் வரை சென்றதிற்கு ஸ்ம்ரிதி மந்தானா மற்றும்  ஹர்மன்பீத் கவுர், மிக உறுதுணையாக இருந்தவர்கள்.

இவர்கள் சில நிமிடங்கள் கிரிக்கெட் பற்றி உரையாடினார்கள்.

இதற்க்கு முன்னதாக ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. வார்னர் 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் (124) ரன்கள் எடுத்தார்.அவரை தொடர்ந்து சதத்தை நெருங்கிய பின்ச், உமேஷ் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் (94) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தையும் உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். ஹேண்ட்ஸ்கோம்ப் (43) அதிரடியாக செயல்பட, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (15), மாத்யூ வேட் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின், களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே அபார துவக்கம் தந்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். ரிச்சர்ட்சன் பந்தில் ரகானே (53) ஆட்டமிழந்தார். ரோகித் (65) ரன்-அவுட்டானார். கோலி (21) எடுத்த நிலையில் பௌல்ட ஆனார். அதிரடி வீரரான ஹர்திக் பாண்ட்யா 40 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட (41) ரன்கள் எடுத்து ஜாம்பா ‘சுழலில்’ அவுட்டானார். சிறப்பாக செயல்பட்ட ஜாதவ் அரை சதம் கடந்தார்.

மழை குறுக்கிட, போட்டி சில நிமிடம் பாதிக்கப்பட்டது. பின், போட்டி துவங்கியது. ஜாதவ் (67) ரன்களில் ஆட்டமிழந்தார். பாண்டே (33) ரன்களில் அவுட்டானார்.ஒரு சிக்சர் விளாசிய தோனியும் (13) அணியை கைவிட்டார். கூல்டர் பந்தில் அக்சர் (5) வெளியேறினார்.இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஷமி (6), உமேஷ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

india_cinemapettaiஇரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வரும் அக்.,1ல் நாக்பூரில் நடக்கவுள்ளது.