இந்திய அணிக்குள் விராட் கோலி செய்யும் குழப்பம்.. பிரச்சனை இருப்பது உண்மைதான் போல

இந்திய அணி வருகிற 16-ஆம் தேதி அன்று தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறது. அங்கே மூன்று ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் தான் தற்போது பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

சமீபத்தில் தான் ஒருநாள் அணிக்கும், 20 ஓவர் போட்டி அணிக்கும், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. ஆனால் ஒருநாள் அணிக்கு கேப்டனாக செயல்படும் ஆசை விராட் கோலிக்கு இருப்பதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். விராத் கோலியின் இந்த முடிவை பிசிசிஐ நிராகரித்துள்ளது.

Virat-Kholi-Cinemapettai.jpg
Virat-Kholi-Cinemapettai.jpg

இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி, தனது மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த நிலையிலேயே இருக்கிறாராம். வீரர்கள் அனைவரும் 12ம் தேதிக்குள் பயோ பபுளுக்கு வந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விராத் கோலி இன்னும் வரவில்லை. அவரின் இந்த செய்கை பிசிசிஐக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக விராட்கோலி, தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் விளையாட விரும்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அவர்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்பது இப்பொழுது வெளிப்படையாக தெரிய வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்