ஸ்டார் நட்சத்திர தம்பதியான அனுஷ்கா சர்மா – விராட் கோலி குடியிருக்கும் வீட்டின் வாடகை குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவியது. இருவரும் அதெல்லாம் இல்லப்பா ரீதியில் ஸ்டேட்மெண்ட் விட்டாலும், பல இடங்களில் ஜோடியாக கை கோர்த்து சென்றது தகவலை உறுதிப்படுத்தி கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில், ஆமா லவ் தான் பண்றோம் என இருதரப்பிலும் சம்மதம் வந்தது. இலங்கைக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியைக் காண வந்திருந்த அனுஷ்கா ஷர்மா அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி பேட்டை உயர்த்தி ஃப்ளையிங் கிஸ் அடித்தது எல்லாம் பாலிவுட்டை மிஞ்சும் லவ்ஸ்! இதை தொடர்ந்து, ஒவ்வொரு போட்டியை இந்திய அணி தோற்கும் போதும், குற்றவாளியாக அனுஷ்காவை கை காட்டினார்கள்.

இருந்தும், எதையுமே பொருட்படுத்தாமல் இருவரும் ஹாயாக சுற்றி வந்தனர். 2017 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இருவருக்கும் திருமணம் என கிசுகிசுக்கள் தொடங்கியது. அதெல்லாம் இல்லை என எண்டுகார்டு போட்டார் விராட். வருட கடைசியில் இப்போ, அப்போ என யூகங்கள் கிளம்பியது. ஆனால், இருதரப்பும் கப்சிப். அப்போது நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் விராட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

திருமணம் உறுதி தான் என அனைவரும் நினைத்து இருந்த நேரம், டிசம்பர் 11-ம் தேதி மாலை 6 மணிக்கெல்லாம் அதிகாரபூர்வ தகவல்களுடன் கோலி – அனுஷ்கா திருமணப் படங்கள் வெளியாகின. திருமணத்திற்கு பிறகு இருவரும் மும்பையில் செட்டிலாக 34 கோடி ரூபாயிற்கு வீட்டை வாங்கினர். ஆனால், சில உள் அலங்கார வேலைகள் செய்ய இருப்பதால், இருவரும் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். அவர்கள் இருக்கும் அந்த வீட்டின் வாடகை ரொம்பலாம் இல்லை. ஜஸ்ட் 15 லட்சம் தானாம்.