Connect with us

Cinemapettai

விராட் கோலியின் ஒய்வு முடிவு.. சரியான திட்டம்.. சரியான முடிவு

virat-kohli

Sports | விளையாட்டு

விராட் கோலியின் ஒய்வு முடிவு.. சரியான திட்டம்.. சரியான முடிவு

விராட் கோலியின் ஒய்வு முடிவு

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக விராட் கோலி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் ஏதாவது ஒரு சாதனை புரிவார். அவர் இப்பொழுது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார். நிகழ்காலத்தின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

சமீபத்தில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை புரிந்தார். அங்கிருந்து நியூசிலாந்து சென்றுள்ளனர், அப்பொழுது ரசிகர்களிடையே பேசிய விராட் கோலி தான் எட்டு வருடங்களுக்கு பின் அனுஷ்காவுக்கும், தன் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு குடும்பமே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

தான் விளையாடும் விளையாட்டை மட்டும் நேசித்தால் தான் சாதனை புரிய முடியும் என்பது தவறான கருத்து, நமது குடும்பத்திற்கு பின்தான் அனைத்துமே நிற்கும் என்று கூறியுள்ளார்.

தற்போது 30 வயதாகும் விராட் கோலி தனது 38வது வயதில் ஓய்வு பெறுவார், அதற்குள் இன்னும் நூற்றுக்கணக்கான சாதனைகளையும் முறியடிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top