விராட் – அனுஷ்கா

நம் இந்தியாவில் சூப்பர் ஹாட் செலிபிரிட்டி இந்த ஜோடி தான். இவர்கள் பல வருடங்கள் காதலித்து பின்னர் மணம் முடித்தனர். தங்கள் துறையில் இன்றைய தேதியில் இவர்கள் தான் நம்பர் 1. பல செலிபிரிட்டிகள் தங்கள் துறையில் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்ய தயங்குவர். ஆனால் இவர்கள் விதிவிலக்கு. மேலும் தங்கள் துணைக்கு வெற்றி, தோல்வி என இரண்டிலும் சப்போர்ட்டாக உடன் இருப்பவர்கள் இவர்கள்.

Virat Kohli Anushka Sharma

ஐபில் போட்டிகள் முடிந்துவிட்டது, கவுண்டி கிரிக்கெட் ஆடுவதாக இருந்த விராட் காயம் காரணமாக செல்லவில்லை. இவர் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியிலும் ஆடப்போவதில்லை.

ஆனந்த் ராய் இயக்கும் ஷாருக்கானின் ஜீரோ, மற்றும் ரன்பிர் நடிப்பில் சஞ்சய் தத்தின் பயோபிக் என இரண்டு படங்களில் அனுஷ்கா நடித்துள்ளார்.

இந்நிலையில் விராட் தன் இன்ஸ்டகிராமில் ஜிம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “மீண்டும் ஒரு ஜிம் செஷன். அனால் என்னுடன் இருப்பது யார் என்று பாருங்கள். பாஸ் போல உடற்பயிற்சி செய்கிறார். ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறோம். அவர் அதிக நேரமாக ஜிம்மில் உள்ளார். என்னை விட அதிகமாக கார்டியோ செய்ய முடியும் இவரால்.” என்றும் கூறியுள்ளார்.

Training together makes it even better! ♥️♥️♥️ @anushkasharma

A post shared by Virat Kohli (@virat.kohli) on

ஆகமொத்தத்தில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் பிட் இந்த் ஜோடி தான்.