Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனுஷ்கா திருமண மோதிரத்துக்காக விராட் கோலி செலவு செய்த மொத்த அமவுன்ட்…

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவியான அனுஷ்கா சர்மாவிற்கு திருமணத்தில் கொடுத்த மோதிரத்தின் விலை பலருக்கு வாய் பிளக்கும் அளவுக்கு இருந்ததாக சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.

கேப்டன் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவியது. இருவரும் அதெல்லாம் இல்லப்பா ரீதியில் ஸ்டேட்மெண்ட் விட்டாலும், பல இடங்களில் ஜோடியாக கை கோர்த்து சென்றது இவர்கள் காதலை உறுதிப்படுத்தி கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில், ஆமா லவ் தான் பண்றோம் என இருதரப்பிலும் சம்மதம் வந்தது. இலங்கைக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த ஒரு நாள் போட்டியைக் காண வந்திருந்த அனுஷ்கா ஷர்மா அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி பேட்டை உயர்த்தி ஃப்ளையிங் கிஸ் அடித்தது எல்லாம் பாலிவுட்டை மிஞ்சும் லவ்ஸ்! இருவரும் காதலித்து இருந்த சமயத்திலேயே இந்திய அணி தோல்விக்கு அனுஷ்காவையே காரணமாக கூறினர். விராட்டும் அதற்கு நெட்டிசன்களை கடுமையாக சாடினார்.

இதை தொடர்ந்து, கடந்த வருடம் இருவரும் இத்தாலியில் மிக ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பல நாள் காதல், திருமணத்தில் முடிந்தது அவர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமணம் முடிந்த பிறகு, இருவரும் அவரவர் துறையில் பிஸியாகினர். மும்பையில் பல கோடி மதிப்பிலான வீட்டை வாங்கி உள்ளனர். ஆனால், வீட்டின் உள் அலங்காரம் வேலைகள் இருப்பதால் வாடகை வீட்டில் குடியேறி இருக்கின்றனர்.

இந்நிலையில், கோஹ்லி அவர்கள் திருமணத்தில் அனுஷ்காவிற்கு என்றே பிரத்யேகமாக வைர மோதிரத்தை திருமணத்தன்று அணிவித்துள்ளார். ஆஸ்திரியாவில் சேர்ந்த பிரபல நிறுவனம் மூலம் இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மோதிரத்தின் விலை ஏறத்தாழ சுமார் 1 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. ரொம்ப அரிதான கலெக்‌ஷனை தேர்வு செய்ய கோலி சுமார் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top