Sports | விளையாட்டு
எதிரியாக இருந்தாலும் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இந்திய கேப்டன்.. இதுக்கும் ஒரு மனசு வேணும்!
2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. ரவி சாஸ்திரி , அனில் கும்ப்ளே, சேவாக் போன்ற முன்னணி ஜாம்பவான்கள் அப்ளை செய்திருந்தனர்.
கடும் போட்டிக்குப் பின் அணில் கும்ப்ளே, தேர்வு செய்யப்பட்டார். அவர் பதவிக்கு வந்த பின்பு பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து கடுமையாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் கேப்டன் கோலி மற்றும் அனில் கும்ப்ளே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.
அணில் கும்ப்ளே இருந்தால் அணியில் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று விராட் கோலி வெளிப்படையாக கூறியிருந்தார்.
இருவரும் ஓராண்டு காலம் மனக்கசப்பில் இருந்தனர். இறுதியில் அனில் கும்ப்ளே 2017 ஆம் ஆண்டு தன்னுடைய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்பு விராட் கோலிக்கு விருப்பமான ரவிசாஸ்திரி மீண்டும் இந்திய அணியின் கோச் ஆக பதவி ஏற்றார்.
விராட் கோலி கும்ப்ளேயின் பிறந்த நாளை மறக்காமல் தனது ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகமாக உள்ளது.

kholi-icc
