

தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் முன் நின்று செய்தனர்.

அதை அடுத்து தற்போது தலைவர் விஜய் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு அவர் வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தலையில் குல்லா என சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து இஸ்லாமிய நண்பர்களுடன் அவர் நோன்பு திறந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.