Connect with us

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட செலிபிரிட்டி புகைப்படங்கள் – ஒரு தொகுப்பு.

இந்த வாரம் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆன சில பிரபலங்களின் போட்டோ தொகுப்பே இந்தப் பதிவு.

சாமி 2 புது கெட் அப்பில் சீயான் விக்ரம்.

சென்னை லோக்கல் ஆசாமியாக விக்ரம் நடித்துள்ள படம் ஸ்கெட்ச். அவர் இப்படத்தின் வேளைகளில் பிஸியாக இருந்த காரணத்தினாலேயே அவர் இல்லாத காட்சிகளை எடுக்க ஆரம்பித்தது சாமி 2  படக்குழு. இந்நிலையில் சாமி 2  படத்தில் தன் புது லுக்கில் உள்ள சீயானின் போட்டோ அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. இந்த இளமையின் ரகசியம் எப்படி என்று தயவு செய்து ஒரு புக் எழுதுங்க விக்ரம் ப்ளீஸ்.

காஞ்சனா3 / முனி4 ல் ஓவியா-

நம்ம பிக் பாஸ் புகழ் ஓவியா, களவாணி 2  நடிக்க விருப்பமில்லை என்று சொன்னது நமக்கு தெரிந்த விஷயமே. சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் வந்து ஒரு கலக்கு கலக்கினார். அதன் பின் அவர் ராகவா லாரனஸுடன் இருக்கும் இந்த போட்டோ தான், அவர் காஞ்சனா படத்தில் நடிக்கப் போவதை உறுதி செய்துள்ளது. மேலும் என் அடுத்த படம் இவருடன் தான் என்பது போல, தன் கை விரலை மாஸ்டரை நோக்கி காட்டுவது தான் இந்த போட்டோவின் எக்ஸ்ட்ரா சிறப்பு.

மெர்சல் படக்குழுவை டென்ஷன் ஆக்கிய சமந்தா

இன்ஸ்டாக்ராமில் எப்பவுமே ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா, வெளியிட்ட ஒரு போட்டோ வால் கடுப்பானது மெர்சல் பட டீம். ஆமாங்க தற்பொழுது  மெர்சல் படத்துக்காக டப்பிங் பேசிய சமந்தா, இந்த போட்டோவை கிளிக் செய்து அப்லோட் பண்ணிவிட்டார். எனினும் சிறிது நேரத்திலேயே அதை அவர் டெலிட்டும் செய்தார். இருந்தாலும் நம்ப நெட்டிசன்கள் முன்னதாகவே அதை இஸ்க்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டனர். பாவம் சமந்தா. ஏற்கனவே இவர் 10 என்றதுக்குள்ள படத்தில்   சிகரெட் பிடித்த காட்சியை, தமிழ் ராகெர்சில் இருந்த எடுத்து வெளியிட்டு அவதிப்பட்டது நாம் எளிதில் மறந்திருக்க முடியாத ஒன்றாகும்.

தன் செல்ல மகனுடன் ஜெனிலியா-

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதிங்கினாலும், அவ்வப்பொழுது தன் கணவன் மற்றும் மகனுடன் ஜெனிலியா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வந்தால் அது சில பல மணிநேரம் வைரலாக தான் இருக்கும். அந்த வகையில் பூஜா கொண்டாட்டத்தில் தன் ரியானுடன் அவர் இருக்கும் போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டனர் நம்ப ரசிக்கப்பெருமக்கள்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்- முரட்டு அரவிந்த் சாமி

மலையாளத்தில்  மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் ஹிட் ஆன படத்தின் ரீமேக் தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படத்தின் டீஸர் ரிலீஸாவதற்கு முன் அரவிந்த் சாமி, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் ஜிம்மில் இருப்பது போன்ற புகைப்படம் அதிக லைக் குகளை வாங்கித்தள்ளியது. லவ்வேர் பாயான அரவிந்த் சாமியின் உடற்கட்டை பார்த்து மாஸ்டர் ஆச்சிர்யப்படுவது போல விளையாட்டாக எடுக்கப்பட்ட போட்டோ இது.

இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் நிவேதா பெத்துராஜ்-

சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் பார்க்க வருவது, ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது அடிக்கடி நடக்கும் சம்பவம் தான். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் எந்த வித ஆர்ப்பாட்டமும், பந்தாவும் இல்லாமல் நிவேதா பெத்துராஜ் டென்ஷனாக மேட்ச் பார்த்த போட்டோவை, பலர் பகிர்ந்தார்கள். இதற்கு நம்ப பக்கத்து வீட்டு பெண் போல் மேட்ச் பார்க்கும் நிவேதா என்று டைட்டில் வேறு வைத்தனர். பெங்களூரு என்பதால் பெரிய ஆரவாரம் இல்லை, இதுவே நம்ப சென்னை சேப்பாக்கத்தில் அவர் மேட்ச் பார்க்க வந்திருந்தால் கட்டாயமாக அது ஒரு நாள் கூத்தில் தான் முடிந்திருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top