கேப்டன் மகன்களை அரவணைத்து நின்ற விஜய்.. பிரேமலதாவை கோட் டீம் சந்திக்க இதுதான் காரணம்

Vijay: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள கோட் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா என பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று உள்ளனர்.

vijay-vijayakanth
vijay-vijayakanth

சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியான நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்தது. அதில் வெங்கட் பிரபு படம் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதேபோல் சில சர்ச்சைகளுக்கும் அவர் விளக்கம் கொடுத்தார்.

vijay-vijayakanth
vijay-vijayakanth

இந்நிலையில் நேற்று கோட் பட குழுவினர் விஜயகாந்த் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. விஜய் கருப்பு நிற உடையில் கையில் பூங்கொத்துடன் கேப்டன் மனைவி பிரேமலதாவை சந்தித்தார்.

கேப்டன் வீட்டுக்கு சென்ற விஜய்

அவருடன் தயாரிப்பாளர் அர்ச்சனா, வெங்கட் பிரபு ஆகியோரும் இருந்தனர். முன்னதாக கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ மூலம் இரண்டு நிமிடம் வர இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் பிரேமலதா என்னிடம் யாரும் அனுமதி வாங்கவில்லை என கூறியிருந்தார்.

vijay
vijay

இதனால் கேப்டன் தரிசனம் கிடைக்குமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அதை சரி செய்யும் பொருட்டு இப்போது விஜய் கேப்டன் வீட்டிற்கு சென்றுள்ளது இந்த தகவலை உண்மையாக்கி இருக்கிறது.

vijay-vijayakanth
vijay-vijayakanth

ஆக மொத்தம் கேப்டன் கோட் படத்தில் வரப்போவது உறுதி. மேலும் விஜய் கேப்டன் மகன்களான ஷண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவர் தோள் மீதும் கை போட்டு அரவணைத்தபடி இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது இப்படி ஒரு போட்டோ எடுத்திருப்பார். அதையும் சேர்த்து விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் விஜயகாந்த் கேமியோ சம்பவமும் உச்சகட்ட ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

கோட் படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ்

Next Story

- Advertisement -