Vanitha Vijayakumar:வனிதா விஜயகுமாருக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கிறது. இவர் எது செய்தாலும் அது மீடியாவில் பிரபலமாகிவிடும். அதில் முக்கியமாக இவருடைய அடுத்தடுத்த திருமணமும் காதலும் எப்போதுமே சர்ச்சை தான்.
ஆனால் இதற்கெல்லாம் வனிதா கவலைப்பட்டதே கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நான் இப்படித்தான் என தன் போக்கில் வாழ்ந்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவர் மூன்றாவதாக ஒரு திருமணம் செய்தார்.
ஆனால் சில நாட்களிலேயே அந்த உறவை தூக்கி எறிந்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். இதெல்லாம் பழைய கதை தற்போது மீடியாக்களுக்கு தீனி போடும் வகையில் ஒரு போட்டோ வெளியாகி இருக்கிறது.
தீயாய் பரவும் ரொமான்டிக் போட்டோ
அதில் வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்ததாகவும் ஒரே வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
அதேபோல் இவர்கள் இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் வேறு வேறு சீசனிலும் கலந்து கொண்டார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோவுடன் அக்டோபர் 5ம் தேதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி என்றால் அந்த தேதியில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறதா? அதற்கான குறிப்பு தான் இந்த போட்டோவா? என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்பதாகவும் அதற்கான ப்ரமோஷன் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் இன்னும் சில தினங்களில் இந்த சஸ்பென்ஸ் உடைபட்டு விடும். அதுவரை ரசிகர்கள் புலம்பிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் இப்படி ஒரு போட்டோவை வனிதா வைரல் செய்துள்ளார். எப்படியோ சோசியல் மீடியாவுக்கு அடுத்த கன்டென்ட் கிடைத்துவிட்டது.
காதலருடன் ரொமான்டிக் போஸ் கொடுத்த வனிதா
- கொதித்தெழுந்த வனிதா.. எதுக்கு தெரியுமா?
- வனிதா மகள் ஜோவிகாவுக்கு செய்யாததை ஸ்ரீ ஹரிக்கு செய்த ரஜினி
- குடுமிப்பிடி சண்டையால் வனிதாவை அசிங்கப்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்