அனிருத்

அனிருத் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்றும், அதுவும் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு ஜோடியாக, கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்தது. தன்னை வித சுமார் 5 வயது மூத்தவருடன் ஜோடி செருகிறாரே அனிருத் என்று பலரும் பேசிவந்தனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன், இந்த தகவலை மறுத்தார். படத்தில் அனிருத் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

எனினும் நேற்று மாலை முதல் பெண் வேடத்தில் அனிருத், என்ற தலைப்பில் போட்டோ ஒன்று வைரலானது. பலர் ஆமோதிக்க, சிலர் அனிருத் இல்லை அது என்றும் சொல்லிவந்தனர்.

Instagram

இந்நிலையில் அது அனிருத் இல்லை என உறுதி செய்துவிட்டார் அவரின் ரசிகர் ஒருவர். இன்ஸ்டகிராமில் இந்தப் புகைப்பட கமெண்டில் “சிவப்பு நிற சேலையில் இருப்பது நீங்கள் தானா?” எனக் கேள்வி எழுப்ப, சம்பந்தப்பட்ட அந்த மாடல், “ஆம், அது நான்தான்” எனத் பதில் கொடுத்துள்ளார் .

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!