செல்ஃபி எடுப்பது சுயநலமான காரியமா? என்ற தலைப்பில் ஆன்லைனில் விவாதங்கள் சூடுபறந்து கொண்டிருக்கின்றன.

சமூக வலைதளங்கள் ஆக்டிவாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்து பல்வேறு நிகழ்வுகள், சம்பவங்கள் மற்றும் கருத்துகள் என எதாக இருந்தாலும், அதற்காக எதிர்வினை சில நொடிகளில் ஆற்றப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கையை உதறிய மெலேனியா ட்ரம்ப் முதல் எஸ்.வி.சேகரின் கருத்து வரை எல்லாவற்றைக் குறித்தும் தங்கள் கருத்துகளை இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போல நெட்டிசன்கள் உதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்ன்த வகையில் சமீபத்திய சென்சேஷனை பாடகர் யேசுதாஸ் தொடங்கி வைத்திருக்கிறார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த 65வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவுக்கு ஹோட்டலில் இருந்து யேசுதாஸ் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஹோட்டலுக்கு வெளியில் அவரைப் பேட்டிகாண மீடியாக்களும், ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்களும் காத்திருந்தனர். ஹோட்டலில் இருந்து வெளியேவந்த அவரை நோக்கிச் சென்ற இளைஞர் ஒருவர், அவரிடம் அனுமதி பெறாமலேயே ஒரு செல்ஃபியைக் கிளிக்கினார்.

அதிகம் படித்தவை:  செம்ம போத ஆகாதே இதையத்தில் ஒரு நொடி வீடியோ பாடல்.!

இதனால், பட்டென கோபப்பட்ட யேசுதாஸ், அந்த செல்ஃபியை டெலீட் செய்யுமாறு இளைஞருக்கு அறிவுறுத்தினார். அத்தோடு, அந்த இளைஞரின் செல்போனை வாங்கி, தானே அந்த செல்ஃபியை டெலீட் செய்யவும் யேசுதாஸ் மறக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்தவர்களைப் பார்த்து, செல்ஃபி என்பது செல்ஃபிஷ் என்று கூறியவாறே சென்றுவிட்டார். அவர் கூறிய அந்த கடைசி வார்த்தைதான் சோசியல் மீடியாக்களில் சமீபத்திய சென்சேஷன்.

ஒரு சிலர் யேசுதாஸுக்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றன. ஆதரவாளர்களோ, “யேசுதாஸ் நாட்டின் முக்கியமான பாடகர். அவ்வளவெ பெரிய மனிதருடன் செல்ஃபி எடுக்கும் முன், அந்த இளைஞர் அனுமதி பெற வேண்டாமா?. அப்படி அனுமதி பெற்று செல்ஃபி எடுக்க முயன்றிருந்தால் இந்த சர்ச்சையே எழுந்திருக்காது. அவர் அமைதியாகத் தனது கருத்தைக் கூறி விட்டு சென்றிருப்பார். அதேபோல், செல்ஃபி என்பது சோசியல் மீடியாக்களில் போஸ்ட் செய்து லைக்குகளை ஆயிரக்கணக்கில் குவிப்பதற்காகத்தானே எடுக்கப்படுகிறது. அதுவும் ஒரு மிகப்பெரிய செலிபிரட்டி கூட எடுக்கும் செல்ஃபிக்கு நிச்சயம் பெரிய ரீச் இருக்கத்தானே செய்யும். அதுவும் ஒருவகையில் சுயநலம்தானே?’’ என்று வாதிடுகிறார்கள்.

அதிகம் படித்தவை:  பாக்ஸ் ஆபிஸ் வசூலின் உச்சம், பாகுபலி-2வை தங்கல் பிடிக்க இன்னும் இத்தனை கோடிகள் தான் உள்ளது

மற்றொரு தரப்பினரோ, இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லார் கையிலும் அதிநவீன கேமிராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அவர்களுக்கு இஷ்டமான தருணத்தை போட்டோக்களாகவும், செல்ஃபிக்களாகவும் அவர்கள் கிளிக்கித் தள்ளுகின்றனர். அதுவும் ஒரு செலிபிரட்டி வந்துவிட்டால், அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான செல்ஃபிக்கள் எடுக்கப்படுவது இன்றைய சூழலில் வழக்கமாகி விட்டது. செல்பிரட்டிகள் போன்ற புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற சம்பவங்களைக் கண்டுகொள்ளாமல் நாகரிகமாக நகர்ந்துகொள்வதுண்டு’ என்கிறார்கள். செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷா என்ற கேள்விக்கு இன்னும் விடைகிடைத்தபாடில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.