தஞ்சாவூர் கோவிலை கண்டு நடுங்கும் விஐபிகள்.. எம்ஜிஆர், இந்திரா காந்திக்கு ஏற்பட்ட விபரீதம்

தமிழ்நாட்டின் மிகப் பழமையான தஞ்சாவூர் பெரிய கோயில், இப்பவரை விஐபிகளை மிரட்டும் கோவிலாக இருந்து வருகிறது. அந்த கோயிலில் என்ன இருக்கு என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் அந்தக் கோயிலைக் கண்டு மிரண்டு வருகின்றனர். ஏனென்றால் தஞ்சாவூர் பெரிய கோவிலில் தான் முதன்முதலில் எம்ஜிஆர் மயக்கம் போட்டு விழுந்தாராம்.

அந்த கோவிலுக்கு சென்று வந்த பிறகுதான் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டாராம். அந்தக் கோவிலுக்கு சென்ற வந்த பிறகுதான் மந்திரி ஒருவரின் பதவியும் பறிக்கப்பட்டதாம். இப்படி அந்த கோவிலை பற்றி நிறைய வதந்திகளை பரப்பி வருகின்றனர். இப்பொழுது பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லான்ச் அந்த கோவிலில் வைக்கலாம் என்று படத்தின் இயக்குனர் மணிரத்னம் முதலில் திட்டம் போட்டிருந்தார்.

அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்பொழுது அந்த நிகழ்ச்சி அங்கே வைக்கவில்லை மாறாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும். ஒருவேளை இந்த சென்டிமென்ட் களை பார்த்து தான் மணிரத்தினம் இப்படி செய்துள்ளார் என்பது தெரியவில்லை.

கோடி கோடியாய் கொட்டி 500 கோடி பொருட்செலவில் எடுத்திருக்கும் படத்திற்கு எந்தவித பிரச்சினையும் வந்து விடக்கூடாது என மணிரத்தினம் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கும் போது ஏற்கனவே தஞ்சை பெரிய கோயிலில் நடந்த சம்பவம் எல்லாம் காது வழி செய்தியாக கேள்விப்பட்டு தன்னுடைய முடிவை மாற்றி இருக்க வாய்ப்பிருக்கிறது.

எனவே பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

அதில் ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தை குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்