Videos | வீடியோக்கள்
பிக்பாஸ் வீட்டில் அத்துமீறிய போட்டியாளர்.. ரெட் கார்டு கொடுத்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் முடியப்போகும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீடு பயங்கர ரணகளமாக இருந்தது. ஆரம்பத்திலேயே சண்டை சச்சரவுமாக இருந்த போட்டியாளர்கள் நேற்று அடிதடி ரேஞ்சுக்கு இறங்கியது பார்ப்பவர்களை பதட்டப்பட வைத்தது. அதிலும் நேற்றைய எபிசோட் கலவரத்தின் உச்சமாக இருந்தது.
அதாவது அசீம் மற்றும் ஆயிஷா இருவருக்கும் இடையே நேற்று பெரிய சண்டை நடந்தது. அதன் முடிவில் ஆயிஷா செருப்பை கழட்டி அடிக்கச் சென்றது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இதற்கு ஆண்டவர் என்ன முடிவு எடுப்பார் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதனால் இன்றைய நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
Also read : செருப்பை கழட்டி அடிக்க போன ஆயிஷா.. கேவலத்தின் உச்சத்திற்கு சென்ற பிக்பாஸ் வீடு
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதாவது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் ஆண்டவர் ரெட் கார்டு கொடுக்க தகுதியானவர் இந்த வீட்டில் யார் என்று கேட்கிறார். இதற்காகவே காத்திருந்த போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அசீமுக்கு அதை கொடுக்கிறார்கள்.
மேலும் நேற்று நடந்த மோதல் சம்பவத்தை பற்றி கூறிய அனைவரும் மரியாதை குறைவு, கண்ணியம் போன்ற காரணங்களை குறிப்பிட்டனர். இது அனைத்தையும் அசீம் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மிகவும் இயல்பாகவே கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். ஆனால் இந்த கேள்வியை கேட்ட ஆண்டவர் முகத்தில் அவ்வளவு கடுமை இருந்தது.
Also read : விக்ரமனுக்கு கொடுக்கப்படும் மெண்டல் டார்ச்சர்.. கலவரமான பிக்பாஸ் வீடு, தலைவரே நீங்களும் உடந்தையா
இதிலேயே இன்றைய எபிசோட் எந்த அளவுக்கு களைக்கட்டும் என்று தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சென்ற வாரம் தான் கமல் மரியாதையை பற்றி நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார். அதற்குள்ளாகவே இப்படி ஒரு சம்பவம் பிக் பாஸ் வீட்டில் நடந்திருப்பதை பார்த்து கமல் என்ன ரியாக் செய்வார் என்பதை காணும் ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது.
நிச்சயம் இந்த விஷயத்தை ஆண்டவர் தட்டிக் கேட்பார் என்றும், இதற்கான தண்டனை அசீமுக்கு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோ வைரலாகி வரும் நிலையில் இன்று இரவு நிகழ்ச்சியை காணும் ஆவலும் அதிகரித்துள்ளது.
