Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-vijaysethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை இழந்த கூட்டணி.. அஜித் பட வாய்ப்பை தட்டி தூக்கிய விஜய்சேதுபதி

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக வலிமை திரைப்படம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து ஹெச் வினோத், போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. மேலும் இந்தப் படத்தை வலிமை திரைப்படம் அளவுக்கு நீண்ட காலம் இழுக்காமல் மிகவும் குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் வலிமை படத்தில் இவர்களுக்குள் ஏதோ மனக் கசப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அடுத்த படம் இவர்கள் பண்ணவில்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக போனி கபூர், எச் வினோத் அடுத்து விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரம் என்றால் நகைச்சுவை பாத்திரம் கிடையாது. ஹீரோவுக்கு இணையான அதாவது விஜய் சேதுபதிக்கு நிகரான ஒரு கேரக்டரில் தான் யோகி பாபு நடிக்க இருக்கிறார். சமீபகாலமாக யோகி பாபு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அந்த வகையில் யோகி பாபு தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக, ஒரு வலுவான கதாபாத்திரத்தில் தான் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைய இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த படத்தை முடித்துவிட வேண்டும் என்று வினோத் உறுதியாக இருக்கிறார்.

இதனால் அவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை தராத காரணத்தினால் இவர்களுடன் உள்ள கூட்டணியை அஜித் முறித்துக் கொண்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
To Top