இது நான் கொடுத்த வலிமை போஸ்டர் இல்ல.. போனி கபூர் மீது செம கடுப்பில் வினோத்

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு தல ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் அடங்கிய மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வலிமை படக்குழுவினர் வெளியிட்டு தல ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் விவேகம் படத்தில் பார்த்ததைப் போல தான் வலிமை படத்தின் போஸ்டர்கள் இருக்கின்றன. அதில் கார்ட்டூன் போல சின்ன சின்ன மாற்றங்களைச் செய்து வெளியிட்டுள்ளது படக்குழு. போதாக்குறைக்கு அஜித்தின் முகத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் மாற்றியது அப்பட்டமாக தெரிகிறது.

உண்மையில் வலிமை படத்தின் போஸ்டர்கள் பெரிய அளவு கவரவில்லை. ஆனால் ஒட்டுமொத்த குறையையும் யுவன் சங்கர் ராஜாவின் தீம் மியூசிக் தீர்த்து வைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

தரமாக செய்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நினைத்த அளவு வரவில்லையே என கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தபோது தான் வினோத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டில் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறுகின்றனர் கோலிவுட் வாசிகள்.

எப்போதுமே தன்னுடைய படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றில் கதை சார்ந்து இருக்க வேண்டும் என விரும்புபவர் வினோத். அப்படித்தான் முதலில் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் ரெடியாகி போனி கபூருக்கு அனுப்பப்பட்டதாம்.

ஆனால் போனிகபூர் இரண்டு வருடம் கழித்து அஜித்தின் படம் வருகிறது எனவும், மேலும் தல ரசிகர்கள் அஜித்திடம் மாஸ் காட்சிகளை தான் எதிர்பார்க்கிறார்கள் எனவும் ஏகப்பட்ட தலையீடுகளாம். மேலும் வினோத்திடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரமோஷன் பணிகளை நான் பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறி போனிகபூர் மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் பெயரை கேட்டாலே தல ரசிகர்கள் கொண்டாடுவார்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கிடைத்தால் சும்மா இருப்பார்களா. இணையத்தில் கொண்டாட்டம் தான்.

valimai-cinemapettai
valimai-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்