லியோ வசூலை வைத்து விளையாடும் லலித்.. அன்றே பகிரங்கமாக போட்டு உடைத்த வினோத்

H.Vinoth:  லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான லியோ படம் ரிலீசுக்கு முன்பே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் அதை சரியாக பூர்த்தி செய்ய லோகேஷ் தவறிவிட்ட நிலையில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. ஆனால் லியோ படத்தின் வசூலை கேட்டால் தலையை சுற்றும் அளவுக்கு தான் இருக்கிறது.

இதைப் பற்றி முன்பே ஒரு பேட்டியில் அஜித் பட இயக்குனர் எச் வினோத் பேசியிருந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது விஜய்யின் லியோ படம் முதல் நாளில் 148.5 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனர் லலித் கூறியிருந்தார்.

அடுத்தடுத்த நாட்களிலும் அதிக வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 500 கோடியை லியோ படம் நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் லியோ படம் முதல் நாள் வசூலில் 148 கோடி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இதற்கான சரியான கணக்கு வழக்கையும் கேட்டு வருகிறார்கள்.

ஏனென்றால் சமீபத்தில் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் வெளியான ஜவான் படம் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ஜவான் படம் 127 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்திருந்தது. ஆனால் இப்போது லியோ படம் 4000 தியேட்டர்களுக்கு அதிகமாக திரையிடப்பட்டிருந்தது.

ஆகையால் இந்த வசூலை நம்ப முடியவில்லை என்று இணையத்தில் லியோ ஸ்கேம் என்ற ஒரு ஹேஷ் டேக் ட்ரெண்ட்டாகி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் வினோத் முன்பே தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலை வைத்து விளையாடுவதாக ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதாவது வசூலை அதிகமாக சொல்லிவிட்டால் இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

அதை வைத்தே தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்து விடுவார்கள். இதை நிறுத்தினால் தான் தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்று வினோத் அப்போது சொல்லி இருந்தார். அதேபோல் லியோ வசூலில் பித்தலாட்டம் நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில் வினோத் முன்பே இதை கணித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்