நாயகன் பட குழந்தை நட்சத்திரம் ஞாபகம் இருக்கா.. பின் பிரகாஷ் ராஜ்க்கு ஜோடியாக நடித்த நடிகை

மணிரத்னம் இயக்கத்தில் 1987ல் வெளியான திரைப்படம் நாயகன். இப்படம் மும்பையில் பிரபல தாதாவாக விளங்கிய வரதராஜ் முதலியாரின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் கமலஹாசன், சரண்யா பொன்வண்ணன், நாசர், ஜனகராஜ் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நாயகன் படத்தில் கமலஹாசன் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் உள்ள நீங்க நல்லவரா, கெட்டவரா என்ற வசனம் இன்றளவும் எல்லோராலும் பேசப்படுகிறது. நாயகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை நீனா.

இப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நீனா பல படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருந்தார்.

தெலுங்கில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கீதாஞ்சலி படத்தில் அறிமுகம் ஆனார். அதுதான் தமிழில் இதயத்தை திருடாதே. முதன்முதலில் நீனாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்துள்ளார் மணிரத்னம். அதன்பிறகு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான விடுகதை படத்தில் நடித்தார். அதில் ஜோடியாக வயதான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்தார்.

vidukathai
vidukathai

பிரபல நட்சத்திரமாக திகழ்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்