fbpx
Connect with us

நடிகர் வினீத்தின் இன்றைய நிலை தெரியுமா?

vineeth

News / செய்திகள்

நடிகர் வினீத்தின் இன்றைய நிலை தெரியுமா?

காதல் தேசம் படத்தில் அப்பாசுடன் இணைந்து முஸ்தபா முஸ்தபா டோன்ட்வொரி முஸ்தபா பாடலை பாடும் வினீத்தை மறக்க முடியாது. இவர் சந்திரமுகியில் ரா ரா பாடலுக்கு ஆடிய பரத நாட்டியம் இன்றளவும் கண்ணுக்குள்ளேயே நிற்கும்.

இவர் நடிகை பத்மினி மற்றும் ஷோபா ஆகியோரின் உறவினர். இவர் பிறந்தது கேரள மாநிலம் கண்ணூரில் என்றாலும் பள்ளி படிப்பை ஊட்டியில் முடித்தார். அதன்பிறகு சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தார். 1985 முதல் மலையாளத்தில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் 1992ல் வெளியான ஆவாரம்பூ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி காதல் தேசம் படத்தில் பிரபலமானார். இதுவரை 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சந்திரமுகி படத்திற்கு பிறகு வீனித்திற்கு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை. தற்போது மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். அதோடு டான்ஸ் மாஸ்டராகவும் உள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top