வினய் குமார்

கர்நாடக அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் பந்துவீச்சாளர். டி 20 போட்டிகளில் ஆட்டத்தின் துவக்கம் மற்றும் கடைசி என இரண்டு இக்கட்டான சூழலிலும் சிறப்பாக பந்து வீசும் திறன் கொண்டவர். அதனால் தான் ஐபில் போட்டிகளில் இவருக்கு டிமாண்ட் அதிகம்.

17 ரன் தேவை – கடைசி ஓவர்

பிராவோ எதிர்கொள்ள முதல் பாலே புல் டாஸாக நோ பால் வீசினார் வினய். ப்ராவோவும் சிக்ஸுக்கு பந்தை பறக்கவிட்டார். ஃப்ரீ ஹிட் ஆக கிடைத்த பந்தில் இரண்டு ரன்கள். ஒரு பந்தில் எட்டு ரன்கள். இரண்டாவது பதில் ஒரு ரன்.மூன்றாவது பந்து வைட் . மீண்டும் வீசப்பட்ட மூன்றாவது பாலில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 3 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் மீண்டும் ஒரு சிங்கிள். ஜெயிக்க 4 ரன்கள் தேவை என்ற நிலையில் வினய் வீசிய ஸ்லொவ் பாலை கணித்து சிக்ஸ் அடித்தார் ஜடேஜா. மீதம் ஒரு பந்து உள்ள நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

அதிகம் படித்தவை:  மரணபயம் காட்டிய பும்ரா : மரண ‘மாஸ்’ காட்டிய மேக்ஸ்வெல்!
Vinay Kumar

ஆட்டத்தின் முதல் மற்றும் கடைசி ஓவரை வீசியது இவரே. 11 பந்துகளில் 35 ரன்கள் வழங்கினார். இதில் ஒரு வைட் மற்றும் நோ பால் அடக்கம். நேற்றைய போட்டி இவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.

செய்தித்தாள், டிவி, சமூகவலைத்தளங்கள் என அனைத்திலும் இவரை பலரும் குறை கூறினார்கள். இன்றைய சூழலில் வீரர்கள் பொதுவாக இது போன்ற நெகட்டிவ் விமர்சங்களுக்கு ரியாக்ட் ஆக மாட்டார்கள். அப்படியே ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வது இல்லை.

ஆனால் வினய்குமார் இன்று தன ட்விட்டரில் கருது ஒன்றை பதிவிட்டார். ” பிரீயா விடுங்க பா, இது வெறும் விளையாட்டு தான். பெங்களூருக்கு எதிராக 9 ரன்கள், மும்பைக்கு எதிராக 10 ரன்கள் நான் எடுக்க விடமால் தடுத்த பொழுது , நீங்கெல்லாம் எங்க இருந்தீங்க ? சில நேரங்களில் தவறு நடந்து விடும்.. கூலா இருங்க ..”

அதிகம் படித்தவை:  பாராட்டிய சச்சின் ! தன்னடக்கத்துடன் நன்றி சொல்லிய ரஷீத் கான் !

இதை பார்த்த நம் நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா ? மீண்டும் இவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

Sc card

இது முதல் டயம் கிடையாது, நீங்க இப்படி பல வாட்டி செஞ்சுருக்கீங்க, கூலா இனிமே பெஞ்ச்ல உட்காருங்க என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.