மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹாலிவுட் கதாநாயகன் வின் டீசலுடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ‘லுங்கி டான்ஸ்’ ஆடி குத்தாட்டம் போட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள “xXx: Return of Xander Cage” என்றப் படம் உலகம் முழுவதும் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் முன்கூட்டியே ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் அறிமுகவிழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நாயகன் வின் டீசல் மும்பை வந்துள்ளார். அறிமுக விழாவின்போது நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது அங்கு ஒலிபரப்பான பாடலின் இசைக்கேற்ப வின் டீசலும் தீபிகாவுடன் சேர்ந்து ‘லுங்கி டான்ஸ்’ ஆடி அசத்தினார்.