Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக தனது மனைவியை வெளியுலகத்திற்கு காண்பித்த நடிகர் விமல்.!

விமல் தமிழ்நாட்டின், மணப்பாறை அருகில் உள்ள பணனான்கொம்பு என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு இவர் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு, நடனம் கற்பதற்கு சென்னையில் உள்ள கூத்துப்பட்டறை என்னும் நாடகக் குழுவில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களான அஜித் குமார், விஜய், இவர்களின் படத்திலும் நடித்துள்ளார்.

vimal

ஆனால் இவற்றில் நடித்ததால் இவர் புகழ்பெறவில்லை என்றாலும், இவர் இதைத்தொடர்ந்து சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் இவருடைய கதாப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி சுந்தரம் ஆகும். இப்படத்தில் இவர் கைபேசியில்
“இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு?” என்ற வசனம் ரசியக்ர்களிடையே மிகவும் பிரபலம் ஆனது

பின்பு இவர் நடித்த களவாணி மற்றும் வாகை சூடவா போன்ற படத்தின் மூலம் கொஞ்சம் பிரபலம் ஆனார் ரசிகர்களிடையே.
இவர் கடந்த 2010 ம் ஆண்டு தனது தோழி அக்சயாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் ஒரு ரன்னிங் கலவரத்தில் நடந்து முடிந்தது.

அக்சயா என்பவர் விமலின் குழந்தை பருவ தோழி, இவர் பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார், அப்பொழுது அக்சயாவை பார்க்க விமல் கல்லூரிக்கு அடிக்கடி சென்று வருவார் இந்த நட்பு காதலாக மாறியது.

இதனை தெரிந்து கொண்ட அக்சயா பெற்றோர் எனது மகளை ஒரு டாக்டருக்கு தான் திருமணம் செய்து கொடுப்போம், உன்னமாதிரி நடிகருக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

பின்பு விமல் எத்தன் பட சூட்டிங்கில் இருந்தார் அக்சயாவுக்கு மாப்பிளை பார்க்கிறார்கள் என தெரிந்து இரவோடு இரவாக ரயில் ஏறி கும்ம்பகோணம் வந்துவிட்டார் அக்சயா அங்கு ஒரு முருகன் கோவிலில் வைத்து அக்சயாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top