Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெறித்தனமாக அடுத்த ரவுண்டுக்கு ரெடியான விமல்.. அடுத்தடுத்து வெளியாகும் 10 படங்கள்!
ஒரு காலத்தில் மினிமம் கேரண்டி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த விமல் தற்போது ஒரு வெற்றி கூட கிடைக்காமல் தடுமாறிக் கொண்டி ருக்கிறார்.
நடிக்கும் படம் எல்லாம் படுதோல்வியை சந்திக்கும் நிலையில் விமலை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளிவந்த மன்னர் வகையறா படம் ஓரளவு வசூல் செய்ததால் தற்போது மீண்டும் பிசியான நடிகராக மாறியுள்ளார் விமல்.
விமல் நடிப்பில் அடுத்ததாக சற்குணம் இயக்கிய எங்க பாட்டன் சொத்து, மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி, கன்னி ராசி ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட படவா, மஞ்சள் குடை, லக்கி, ப்ரோக்கர் மற்றும் பெயரிடப்படாத ஒரு படம் என அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் விமல் நடிப்பில் தொடங்கப்பட்டுவிட்டது.
இதனைத் தொடர்ந்து குலசாமி என்ற படத்திலும், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனும் படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் குலசாமி படத்திற்கு விஜய் சேதுபதி கதை வசனம் எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்னதான் மார்க்கெட் இல்லை என்றாலும் கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் விமலை கோலிவுட் வட்டாரமே ஆச்சரியமாக பார்த்து வருகிறது.
