Connect with us
Cinemapettai

Cinemapettai

vimal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேலக்ஸி ஸ்டார் விமலின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இனி தமிழ் சினிமாவின் தல, தளபதி எல்லாமே இவர்தான்!

தமிழ்சினிமாவில் சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு தற்போது இருக்க வேண்டியவர் விமல் தான்.

ஆனால் தன்னுடைய படக்கதை தேர்வில் சொதப்பி தொடர் தோல்வி படங்களை கொடுத்து தற்போது ஒரு ஹிட் கொடுக்க தடுமாறி வருகிறார்.

சொந்தப்படம் எடுத்து சூனியம் வைத்துக்கொண்ட கதையும் இவருக்கு உண்டு.

கைவசம் பல படங்கள் வைத்திருந்தாலும் அதனை தனது சம்பளத்தை உயர்த்த முடியாமல் திண்டாடி வருகிறாராம்.

கொடுக்குற காசுக்கு நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விமலின் அடுத்த ரிலீசாகவிருக்கும் திரைப்படம் கன்னி ராசி.

விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை முடிவு செய்யப்பட்டு தற்போது மீண்டும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆகட்டும் தமிழ் சினிமாவில் என்னுடைய ரேஞ்ச் என்னவென்று பாருங்கள் என இப்போதே தன்னுடைய வட்டாரங்களில் பெருமை பேச ஆரம்பித்து விட்டாராம் கேலக்ஸி ஸ்டார்.

Kanni Rasi First Look POster

Continue Reading
To Top