புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரே குஜால் தான் போங்க.. நடிகர் விமலுக்கு அடித்த ஜாக்பாட்

களவாணி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் விமர்சன ரீதியாக விமலுக்கு பெருமையை சேர்த்துள்ளது.

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விமல். பசங்க படத்தில் ஹீரோவாக என்ட்ரியான விமலுக்கு ‘களவாணி’ மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது. சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. விமலுடன் ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படி இருக்க கூடா நட்பு கேடில் முடியும் என்பதை போல, நடிகர் விமலின் பழக்க வழக்கங்கள் சரி இல்லாத காரணத்தினால் சினிமா துறையில் கொஞ்சம் பின்னடைவை சந்தித்தார். குடி பழக்கம் அதீதமாக இருந்தது. இதை தொடர்ந்து தவறை திருத்திக்கொள்ள நினைத்த நடிகர் விமல் குடி பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்து, தற்போது நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்..

ஒரே குஜால் தான் போங்க..

இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் விமல் நடிப்பில், ஒரு supernatural horror படம் வெளியாகவுள்ளது. இது ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்க, இந்த படத்தின் கதாநாயகிகளுடன் விமல் கொடுத்த போஸ்.. பலருக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ ஜாலி என்ற அந்த மனநிலை அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிகிறது. இந்த படத்தில் நடித்தே முடித்துவிட்டார். படம் 16 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகிறதாம். இந்த படம் விமலுக்கு 35-ஆவது படம். படத்தின் பெயர் பெல்லடோனா.. தேஜஸ்வினி சர்மா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், மணிப்பூரை சேர்ந்த மெக்சினாவும் நாயகியாக நடிக்கிறார்.

- Advertisement -

Trending News