குரலுக்காக நிராகரிக்கப்பட்ட வில்லன் நடிகர்.. அர்ஜுனின் இந்த செயலால் நடந்த பெரிய மாற்றம்

சினிமாவை பொருத்தவரை நடிப்பதற்கு வெளித்தோற்றமும் உடல் அமைப்பும் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு குரலும் மிக முக்கியம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான குரலால் வெற்றியின் உச்சத்தை தொட்ட நடிகர் என்றால் அது ரகுவரன் தான். தன் குரல் மூலம் கொடுரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளை பெற்றிருந்தார் ரகுவரன்.

ஆனால் இவரது குரலுக்காக இவருக்கு அவ்வளவு எளிதில் திரையுலகில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பல போராட்டங்களுக்கு பின்னரே இவர் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து வெற்றி கண்டார். அந்த வரிசையில் குரல் காரணமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் நிராகரிக்கப்பட்ட மற்றொரு நடிகர் தான் ஜெகபதி பாபு.

தெலுங்கு நடிகரான இவர் நடிக்க தொடங்கிய ஆரம்பகாலத்தில் இவரது குரல் காரணமாக பல இயக்குனர்களால் நிராகரிக்கப்பட்டாராம். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த குரலை வைத்தே அவர் சினிமாவில் வாய்ப்பு பெற்று தற்போது பிரபல வில்லன் நடிகராக தென்னிந்திய சினிமாவில் திகழ்ந்து வருகிறார்.

சினிமாவில் நடிகர்கள் ஒருவருக்கொருவர் நட்பாக பழகுவது நட்பு காரணமாக உதவிகள் செய்வது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. அந்த வகையில் ஜெகபதி பாபுவிற்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்றால் அது ஆக்ஷன் கிங் அர்ஜூன் தானாம். இவர்கள் இருவருக்கும் இடையே மிக நெருக்கமான நட்பு இருந்து வருகிறது.

நட்பு காரணமாக அர்ஜூன் ஜெகபதி பாபுவிற்கு சினிமாவில் நிறைய உதவிகள் செய்துள்ளாராம். அந்த வகையில் ஸ்வகதம் என்ற படத்தில் அர்ஜூன் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 40 நாட்கள் அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட அர்ஜூன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்.

அந்த சமயத்தில் அர்ஜூன் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்துள்ளார். ஆனால் தனது நண்பன் ஜெகபதி பாபுவிற்கு சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை ஜெகபதி பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்ததோடு தனது உயிர் நண்பன் அர்ஜூன் தான் என குறிப்பிட்டுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்