Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan-hero

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பட வில்லன் கைது.. நடிகையிடம் ஓட்டலில் சில்மிஷம்.! பரபரப்பை கிளப்பிய சம்பவம்

பிரபல வில்லன் நடிகர் விஜய் ராஸ். இவர் தாம்மால், ரன், வெல்கம், டெல்லி பெல்லி, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் வில்லனாக மிரட்டி இருந்தார். படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இவர் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் நடித்து வரும் ஷெர்னி என்ற படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாலாகாட் மாவட்டத்தில் நடந்து வருகிறது.

இதற்காக படக்குழுவினர் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கிருந்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று வந்தனர்.

நடிகர் விஜய் ராஸ் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நடிகை போலீசில் புகார் அளித்து உள்ளார்.

முன்னணி நடிகர் என்று பாராமல் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோண்டியா பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த நடிகை விஜய் ராசை கைது செய்தனர்.

vijay-raaz

vijay-raaz

Continue Reading
To Top