வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அஜித்துக்குப் பிறகு தனுஷுக்கு வில்லன்.. அந்த வாரிசு நடிகர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

விஜயகுமாரின் மகனாக சினிமாவின் முறை மாப்பிள்ளை படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் அருண் விஜய். அடுத்து, பிரியம், அன்புடன், பாண்டவர் பூமி, இயற்கை, உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த படம் தடையறத் தக்க.

2012 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கினார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அடுத்து, அஜித்தின் நடிப்பில், மெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார்.

இதையடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், சாஹோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா பாதியிலேயே விலகிய வணங்கான் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

வில்லனாக நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம்!

இந்த நிலையில், பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் ஹீரோவாக நடித்து, தயாரித்து இயக்கி வரும் படம் இட்லி கடை. இப்படம் தனுஷின் இயக்கத்தில் உருவாகும் 4 வது படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தில் அருண்விஜய், நித்யா மேனன், ஹாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் அருண் விஜய் இதில் நடிப்பதற்காக ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து, அஜித் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அருண் விஜய், தனுஷ் படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இப்படம் அவரது கேரியலில் தரமான படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Trending News