Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு காலத்தில் வில்லன்கள்.. ஆனால் இப்போ ஹீரோக்கள்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கிகொண்டிருக்கும் சில நடிகர்களை பார்ப்போம். முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் வில்லனாக அறிமுகமாகி இப்பொழுது தமிழ்நாட்டின் முதல் ஸ்டாராக உள்ளார். அடுத்ததாக சத்யராஜ் வில்லனாக 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகுதான் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கி இப்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வில்லனாக அறிமுகமான சரத்குமார் ஹீரோவாக கலக்கி இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரகாஷ்ராஜ் வில்லனுக்கு வில்லன் என அறியப்பட்டவர். பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வில்லன் என்றால் அது முதல் சாய்ஸ் பிரகாஷ்ராஜ் தான்.
இவர் காஞ்சிவரம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். அவரும் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் நாசர் வில்லன் குணச்சித்திர வேடங்களில் நடித்த நாசர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆர்கே சுரேஷ் வில்லனாக அறிமுகமான இவர் இப்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
பாபி சிம்ஹா ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் கிஷோர் பொல்லாதவன் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அவர் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
