கிணறு வெட்ட கிளம்பிய பூதம்.. இளம் நடிகையை டார்ச்சர் செய்த வில்லன் நடிகர்

Gossip: எப்போதுமே திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரங்கள் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் தற்போது இந்த விவகாரம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஏற்கனவே பல நடிகைகள் தங்களுக்கு நடந்த விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து வருகின்றனர். ஆனால் இப்போது மலையாள கரையோரம் வீசும் புயல்தான் பல நடிகர்கள் வயிற்றில் பயப் பந்தை உருள வைத்துள்ளது.

எப்போது எந்த நடிகரின் பெயர் வெளிச்சத்திற்கு வருமோ என அனைவரும் பீதியில் இருக்கின்றனர். அதில் ஏற்கனவே சில நடிகர்களின் பெயர்கள் மாட்டிய நிலையில் வில்லன் நடிகர் ஒருவர் செய்த வேலையும் தெரிய வந்துள்ளது.

வில்லன் நடிகரின் இன்னொரு முகம்

பல பேரின் முகத்திரையை பகிரங்கமாக கிழித்த இளம் நடிகை தற்போது வில்லன் நடிகர் பெயரையும் சொல்லி இருக்கிறார். இந்த நடிகர் நடிகையின் போன் நம்பரை வாங்கி முகம் சுளிக்கும் வகையில் மெசேஜ் செய்திருக்கிறார்.

அது மட்டும் இன்றி தன் ஆசைக்கு இணங்கும் படியும் கேட்டு இருக்கிறார். அதுதான் புயலை கிளப்பி உள்ளது. இவரைத் தொடர்ந்து முக்கிய பிரபலம் ஒருவரும் சிக்குவார் என்கின்றனர். ஏற்கனவே அவர் மீது ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கிறது.

அதை தன் செல்வாக்கால் காலி செய்த நடிகர் தற்போது வேறு ஒரு விஷயத்தில் மாட்ட வாய்ப்பு இருக்கிறதாம். அவரை பழி தீர்க்க தயாராகும் இளம் நடிகை பல உண்மைகளை புட்டு புட்டு வைக்க இருப்பதாக கோடம்பாக்க வட்டாரத்தில் அதிர்ச்சியுடன் பேசி வருகின்றனர்.

நடிகைகளை டார்ச்சர் செய்யும் ஹீரோக்கள்

Next Story

- Advertisement -