நடிகர் விக்ராந்த் மனைவியும் பெரிய பிரபலம் தானுங்க!

விக்ராந்த், தமிழ்த் திரையுலகில் 2005 ஆம் ஆண்டு கற்க கசடற படத்தின் வாயிலாக அறிமுகமானவர். இவர் தளபதி விஜயின் உறவினர். என்ன தான் பல படங்களில் நடிதுறந்தாலும், நட்சத்திர கிரிக்கெட்டில் வாயிலாக பிரபலமானார் என்றால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க விடாமுயற்சியுடன் போராடி வருபவர். இவர் நடிகை கனகதுர்க்கா – ஒளிப்பதிவாளர் ஹேமச்சந்திரனின் மகளான, மானசாவை 2009 இல் திருமணம் செய்தார்.

தற்போது இவருடைய மனைவி மானசா பற்றிய தகவல் வெளியாகி வருகிறது, தமிழில் உதிரி பூக்கள் மற்றும் மலையாளத்தில் மக்களுடே அம்மே போன்ற சீரியல்களில் நடித்தவர் தான் அவர்.

vikranth and his wife manasa

ஆனால் விக்ராந்தின் மனைவி சீரியல் நடிகை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Leave a Comment