Connect with us

Cinemapettai

இமான் இசையில் எமோஷனல் பயணம் ! பக்ரீத் திரைவிமர்சனம்

Cinema News | சினிமா செய்திகள்

இமான் இசையில் எமோஷனல் பயணம் ! பக்ரீத் திரைவிமர்சனம்

தேவர் பிலிம்ஸ் தொடங்கி இன்று வரை பலரும் மிருகத்திற்கு முக்கிய துவம் கொடுத்து படம் எடுத்து வருகின்றனர் நம் கோலிவுட்டில். அந்த வகையில் ரெடியாகி உள்ள படமே பக்ரீத். இந்தியாவில் ஒட்டகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள முதல் படமும் இது தானாம்.

கதை –  விவசாயி ரத்தினம் என்ற ரோலில் விக்ராந்த் சந்தோஷ். நிலத்தகராறு முடிந்து விவசாயம் செய்ய பேங்க் லோன் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதற்கு முன் வேலைகளை ஆரம்பிக்க தன் நண்பனின் உதவியை நாடுகிறார். பணம் கேட்டு சென்ற இடத்தில் பக்ரீத்துக்கு பலிக்கும் வந்த ஒட்டகத்தின் குட்டியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

இவரின் மனைவியும் மகளும் ஒட்டக குட்டியை வீட்டில் ஒருவராக மாற்றிவிடுகின்றனர். ஒட்டகம் இங்கு இருப்பதை விட ராஜஸ்தானின் பாலைவனம் தான் சிறந்தது என்பதை அறிய வருகின்றது இந்த குடும்பம். லாரி ஏற்றி ராஜஸ்தான் அனுப்பும் நோக்கில் செல்லும் விக்ராந்த், தானும் உடன் பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது. வழியில் ஏற்படும் பிரச்சனை, இவர்கள் படும் அவதி என்றே நகர்கிறது இரண்டாம் பாதி. விக்ராந்தின் உன்னத நோக்கம் என்ன ஆனது என்பதை மிக எமோஷனலாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

பிளஸ் –  எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்த ஜெகதீசன் சுப்பு, டி இமானின் இசை, விக்ராந்த் சந்தோஷ்

சினிமாபேட்டை அலசல் – மனிதனுக்கும்,  ஒட்டகத்துக்கும் ஆன பாசப்பிணைப்பை நம் கண் முன்னே நிறுத்துகிறார் இயக்குனர். அப்பாவித்தனமான் தன் உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் டாப் க்ளாஸ் செய்துவிட்டார் விக்ராந்த் (வாழ்த்துக்கள் ப்ரோ). இயக்குனர் தன் மனதில் உதித்த கதையை படமாக்கினாலும் அதற்கு உயிர் நாடியாக இருப்பது இமானின் இசை தான் (கட்டாயம் தேசிய விருது இருக்கு ஜி உங்களுக்கு). இரண்டு மணிநேரத்தில் இவ்வுலகில் அணைத்து ஜீவராசிகளுக்கும் வாழ இடம் உண்டு என்ற மெசஜையும் சொல்லியதற்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – இது ஒரு பீல் குட் படம். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கும், வளர்க்க விரும்புபவர்களும் விரும்பி பார்க்கும் படி உள்ளது. குழந்தைகளுக்கு இது படம் அல்ல ஒரு பாடம். நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்து நம்மை கண் கலங்க வைக்காமல் முடித்து சிறப்போ சிறப்பு. எதுவும் எதிர்பார்க்காமல் சென்றால், நல்ல அனுபவத்துடன் திரும்பி வரலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3.25/5 . 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top