Videos | வீடியோக்கள்
கன்னட சினிமாவின் அடுத்த கே ஜி எஃப்.. கொல மாஸாக வந்த விக்ராந்த் ரோணா டீசர்
தமிழ் சினிமாவில் மட்டும்தான் இன்னும் முன்னணி நடிகர்கள் பலரும் பான் இந்தியா படங்களை செய்ய யோசித்து வருகின்றனர். தமிழில் மட்டுமே நமக்கு மார்க்கெட் போதுமென நினைத்து விட்டார்களா அல்லது மற்ற மொழிகளில் நமக்கு ஆதரவு இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை.
ஆனால் கன்னட சினிமாவில் முக்கிய நடிகர்களாக வலம் வரும் பலரும் தற்சமயம் நடிக்கும் படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலர் மற்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளதுதான்.
அப்படி ஒரு நடிகர்தான் கிச்சா சுதீப். நான் ஈ, பாகுபலி போன்ற படங்களில் நடித்துள்ள கிச்சா சுதீப்புக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்புள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக விக்ராந்த் ரோணா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் டீஸரை வெளியிட்டனர். அந்த டீசரை பார்க்கும்போதே கன்னட சினிமாவிலிருந்து இந்திய சினிமாவை விரட்ட இன்னொரு படம் ரெடி என்பது போல தரமாக உள்ளது.
ஏற்கனவே கேஜிஎஃப் என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இந்தியா முழுவதும் செம எதிர்பார்ப்புள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
