இந்த ஆண்டு வெளியான படங்களில் பாகுபலிக்கு பிறகு வசூலில் 2 -ம் இடத்தை பிடித்து விக்ரம் வேதா வரலாறு படைத்துள்ளது ,
விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ப்ளாக்பஸ்டரில் இந்த ஆண்டு வெளியான பாகுபலி-2 படத்திற்கு அடுத்த இடத்தை விக்ரம் வேதா பிடித்து சாதனை படைத்துள்ளது. சென்னை சிட்டி பாக்ஸ் ஆபீஸில் இப்படம், 3-வது வார இறுதியில் 7 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.vijaysethupathi

இந்நிலையில், விக்ரம் வேதா வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் மாதவன், “விக்ரம் வேதா படத்தின் வெளியீட்டின்போது சில பிரச்னைகள் இருந்தாலும், படம் வெளிவந்து வரலாறு படைத்திருக்கிறது. பட வெளியீட்டு தேதியை தள்ளி வைக்கலாம் என்ற பேச்சு வந்தது. ஏனென்றால் அப்போதுதான் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

படம் ஜூலை 21 அன்று வெளியாகி கடவுள் அருளால் வரலாறு படைத்தது. எனவே, நடக்கும் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன்” என்கிறார்.படம் வெளியாகி வெற்றி அடைந்திருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்தார்.