சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் தொடர்ந்து 5 படங்களுக்கு மேல் தோல்வி படங்களை கொடுத்தவர் தான் சீயான் விக்ரம். அதற்குப் பிறகு இயக்குனர் பாலா புண்ணியத்தில் சேது பட வாய்ப்பு கிடைத்தது. பிறகுதான் விக்ரம் யார் என்பதே தமிழ் சினிமாவுக்கு தெரிந்தது.
சேது படத்திற்கு பிறகு வெளிவந்த பிதாமகன் திரைப்படம் அவருக்கு நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உதவியாக அமைந்ததே. அதனைத் தொடர்ந்து வெளியான தில் மற்றும் தூள் போன்ற படங்கள் அவரை கமர்சியல் ஹீரோவாக உருவாக்கியது.
அதிலும் சாமி படம் எல்லாம் தியேட்டர்களில் தறிகெட்டு ஓடியது. அன்றைய காலகட்டத்தில் அதிக நாட்கள் ஓடிய படமாகவும் அதிக வசூல் செய்த படமாகவும் மாறி விக்ரமின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ஆனால் கடந்த சில வருடங்களாக சீயான் விக்ரம் நடிக்கும் படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. விக்ரம் படங்கள் பெரிய பட்ஜெட்டில் தயாராவதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என தியேட்டர்காரர்கள் தொடர்ந்து விக்ரம் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் கோப்ரா படத்தை பெரிதும் நம்பியுள்ளாராம். இந்த படம் வெற்றி அடைவதை காட்டிலும் வசூல் ரீதியாகவும் தனக்கு ஒரு நல்ல அடையாளத்தை மீண்டும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி கொடுக்கும் என கஷ்டப்பட்டு உழைத்து வருகிறாராம்.
முன்னதாக துருவ நட்சத்திரம் படம் தன்னுடைய தோல்விப் பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பிக்கொண்டிருந்த விக்ரமுக்கு கௌதம் மேனன் செய்த துரோகத்தால் தற்போது அந்த படத்தை வேண்டுமென்றே இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம். கோப்ரா படத்தின் வெற்றியே விக்ரமின் அடுத்தடுத்த படங்களின் வியாபாரம் மற்றும் சம்பளம் ஆகியவற்றை நிரூபிக்கும் என்பதால் இந்த படத்தின் மீது கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டுள்ளாராம்.

கவலையே படாதீங்க சியான், படம் தாறுமாறு வெற்றியடையும்!