டப்பிங் செய்ததில் விக்ரமுக்கு பிடித்த படம்.. வெளிப்படையாய் சொன்ன பல நாள் ரகசியம்

தமிழ் சினிமாவில் ஈசியாக நுழைந்துவிடும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில், எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் இன்று கஷ்டப்பட்டு முன்னேறி இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். ஆரம்பத்தில் இவர் அதிர்ஷ்டம் இல்லாத நடிகர் என்று சினிமா துறையில் இருந்து ஒதுங்கியே விட்டனர்.

இருந்தாலும் மனம் தளராத சியான் விக்ரம் ஹீரோக்களுக்கு டப்பிங் செய்தும், சீரியல்களில் நடிக்கும் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கி காலத்தை ஓட்டி வந்தார். பின்னணி குரல் என்றாலே சியான் விக்ரம்தான் என ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சினிமாவில் இன்று எட்டாத உயரத்தில் இருக்கிறார்.

ஆரம்பத்தில் அஜித், அப்பாஸ், பிரபுதேவா என்றால் அது சியான் விக்ரம் உடைய குரல்தான். அஜித்திற்கு அமராவதி படத்திலும், பிரபுதேவாவிற்கு காதலன், மின்சார கனவு படத்திலும், அப்பாஸ்-க்கு காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் வினித்திற்கு புதிய முகம் படத்திலும் இவர் குரல் கொடுத்து அசத்தி இருப்பார்.

அதுமட்டுமின்றி ஆரம்பத்தில் அவர்களின் எல்லா படங்களிலும் அவர்களுக்கு இவர் தான் குரல் கொடுத்து வந்தார். இப்பொழுது விக்ரமிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார் . டப்பிங் ஆர்டிஸ்டாக உங்களுக்கு மனநிறைவைத் தந்த படம் எது? என்ற கேள்விதான் அது.

அதற்கு சியான் விக்ரம், ‘மகான் படத்திற்கு சிறுவயது காந்திக்கு குரல் கொடுத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்தப் படமே இதுவரை டப்பிங் கொடுத்த படங்களை எல்லாம் விட எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த மகான் படத்தில் சியான் விக்ரம் அவருடைய மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்திருந்த முதல் படம் ஆகும். அத்துடன் இந்தப் படம் ஓடிடியில் இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்