குடும்பங்கள் கொண்டாடிய விக்ரமனின் ஒரே படம்.. இன்று வரை உடைக்க முடியாத நம்பர் ஒன் வசூல் சாதனை

Director Vikraman: பொதுவாக ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு விதமான ஸ்டைல் இருக்கும். அவர்களின் படங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது அதே ஜானரில் தான் இருக்கும். அவ்வாறு விக்ரமனின் படங்கள் எல்லாம் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து தான் எடுத்திருப்பார்.

அந்த வகையில் பூவே உனக்காக, வானத்தைப்போல, உன்னை நினைத்து போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனாலும் அவருடைய ஒரு படம் 26 ஆண்டுகள் தாண்டியும் மக்கள் மனதில் நங்கூரம் போல் பதிந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் சாதனையை தற்போது வரை முறியடிக்க முடியவில்லை.

Also Read : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 காதல் படங்கள்.. தளபதி விஜய்க்கு அடையாளம் கொடுத்த விக்ரமன்

அதாவது விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன், மணிவண்ணன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரியவம்சம். இந்த படத்தில் காதல் தோல்வி, ஒரே பாட்டில் முன்னேறுவது, இட்லி உப்புமா, தந்தை மகன் பாசம் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி இருந்தார் இயக்குனர்.

இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் படமாக சூரிய வம்சம் இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக மக்கள் தியேட்டருக்கு சென்று பார்த்த படமும் சூரியவம்சம் தான். அதற்கு முன்பு வசூல் செய்த அத்தனை படங்களின் சாதனையையும் இப்படம் முறியடித்தது.

Also Read : இனிமே சின்ராச கையில பிடிக்கவே முடியாது.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-வுக்கு தயாராகும் சரத்குமார்

மேலும் சூரிய வம்சம் படம் கிட்டத்தட்ட 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் இப்படம் வெளியாகி 26 வருடங்கள் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக இணையத்தில் சூரியவம்சம் படத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் இந்த படத்தில் நடித்திருந்தார். அவரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இப்படம் அமைந்திருந்தது. இந்நிலையில் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் சூரியவம்சம் படம் பேசப்படும்.

Also Read : சித்தார்தின் டக்கரை பின்னுக்கு தள்ளிய சரத்குமார்.. 2வது நாள் வசூலில் அதிரடி காட்டும் போர் தொழில்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்