Tamil Cinema News | சினிமா செய்திகள்
அசீமை வைத்து ஹீரோவாக காட்டிக் கொள்ளும் விக்ரமன்.. சோசியல் மீடியாவில் கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்
சமீப காலமாக விக்ரமின் நடவடிக்கைகளை பார்த்து வரும் ரசிகர்கள் அவருடைய உண்மை குணத்தை அறிந்து கொண்டனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்த போட்டியாளர் என்றால் அது விக்ரமன் தான். ஆரம்பத்தில் இருந்தே இவருடைய பேச்சும், நடவடிக்கையும் பார்ப்பவர்களை ரொம்பவே கவர்ந்தது அதனாலேயே இவருக்கு இருக்கும் ஆதரவும் சோசியல் மீடியாவில் பெருகி வந்தது.
ஆனால் இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான். சமீப காலமாக விக்ரமின் நடவடிக்கைகளை பார்த்து வரும் ரசிகர்கள் அவருடைய உண்மை குணத்தை அறிந்து கொண்டனர். ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் விக்ரமனின் ஒரே டார்கெட் அசீம் தான் என்பது பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது.
Also read: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஆடியன்ஸ்.. இந்த வாரம் உறுதியாக வெளியேறும் டம்மி பீஸ்
கடந்த சீசன்களை விட இந்த சீசன் தான் ரொம்பவும் உக்கிரமாக போய்க் கொண்டிருக்கிறது. அதாவது போட்டியாளர்கள் மருந்துக்கு கூட கலகலப்பாக பேசி சிரித்தது கிடையாது. எப்போதும் கோபம், சண்டை என்றுதான் இந்த நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் அசீமை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கட்டம் கட்டி வருகின்றனர்.
அவர்கள் அனைவரையும் ஓவர் டேக் செய்யும் வகையில் விக்ரமன் தான் அவரிடம் அதிகமாக சண்டை போட்டு வருகிறார். நேற்றைய எபிசோடில் கூட அமுதவாணனுக்கும் அசீமுக்கும் நடந்த சண்டையில் விக்ரமன் பேசியது பலருக்கும் பிடிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அசீமை அட்டகத்தி என்று மோசமாக விமர்சித்ததும் தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் வேறு யாராவது சண்டை போட்டால் கூட விக்ரமன் அதை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார். அதுவே அசீம் என்றால் மட்டும் முதல் ஆளாக வந்து கருத்து கூறுவார். அந்த அளவுக்கு அவர் மனதில் வன்மம் இருக்கிறது என்று ரசிகர்கள் அவரை சோசியல் மீடியாவில் கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.
ஒரு விதத்தில் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வந்தால் அசின் மேல் சிலசில குறைகள் இருந்தாலும் பல நேரங்களில் அவர் செய்வது சரியாக தான் இருக்கும். அதுவே விக்ரமனை பார்த்தால் நேரம் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றது போல் தன்னை ஒரு ஹீரோவாக காட்டிக்கொள்ள அசீமை பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் அவருக்கு இருக்கும் ஆதரவு குறைந்து அசீமுக்கு பெருகி வருகிறது.
Also read: மயிரிழையில் உயிர் தப்பிய வாயாடி தனம்.. இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட்
