fbpx
Connect with us

Cinemapettai

கதை கூட தேவையில்லை, அஜித் நடிக்க தயார்.. யார் அந்த பிரபல இயக்குனர் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கதை கூட தேவையில்லை, அஜித் நடிக்க தயார்.. யார் அந்த பிரபல இயக்குனர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் முக்கியமாக கருதப்படுபவர் தல அஜித். இவருடைய திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் திருவிழாவைப் போல் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அந்த அளவு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.

இந்த வருடம் மட்டும் இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் தல அஜித் தற்போது நேர்கொண்டபார்வை படத்தை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு விக்ரமன் அளித்த பேட்டி ஒன்றில் தல அஜித் பற்றி கூறியுள்ளார். இது தல ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் கூறியதாவது, ஒரு படம் குறித்து தல அஜித் இடம் விவாதிக்க சென்றதாகவும், அதற்கு தல அஜித் உங்க படம் என்றால் கதை கூட சொல்லவேணாம் சார், நான் நடிக்கிறேன் என்று கூறினாராம்.

அதன் பிறகு விக்ரமுடன் இணைய வாய்ப்பு இல்லாத காரணத்தினால், அவரது அசிஸ்டன்ட் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என திரைப்படத்தில் விக்ரமனின் ஒரு வார்த்தைக்காக பிளாஷ்பேக் காட்சியில் நடித்துக் கொடுத்ததாகவும் உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார் விக்ரமன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top