இந்த ரசிகரை மட்டும் அல்ல அனைவரையும் அசர வைத்த விக்ரமின் செயல்

vikram-fanவிக்ரம் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம்.இந்நிலையில் சமீபத்தில் இவர் கேரளாவிற்கு செல்ல அங்கு ஒரு ரசிகர், இவர் காரில் இருப்பதை அறிந்து பின் தொடர்ந்து வந்துள்ளார், உடனே என்ன வேண்டும் என்று கேட்க ‘உங்களுடன் ஒரு போட்டோ சார்’ என ரசிகர் கூறியுள்ளார்.

இவ்வளவு தானே வா… என்று போட்டோ எடுத்துள்ளார். ஆனால், இரவு நேரம் என்பதால், அந்த புகைப்படம் ஒழுங்காக வரவில்லை, உடனே ரூ 500 பணம் கொடுத்து பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வரச்சொல்லியுள்ளார்.

ரசிகர் ஹோட்டல் வர, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதை அந்த ரசிகர் மிகுந்த சந்தோஷத்துடன் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Comments

comments

More Cinema News: