Connect with us
Cinemapettai

Cinemapettai

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் சீயான் விக்ரம்? விஜய் சேதுபதிக்கு பதிலாக இவராம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சீயான் விக்ரம் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வெரைட்டியான நடிப்புகளை கொடுத்து வருபவர் சீயான் விக்ரம்.

தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா எனும் படத்தில் 7 வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய சினிமாவில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தல் பற்றிய கதை என்பதால் முதன் முதலில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வில்லனாக நடிக்க இருந்தவர் விஜய் சேதுபதி.

pushpa-alluarjun-cinemapettai

pushpa-alluarjun-cinemapettai

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படத்திலிருந்து விலக பின்னர் பாபி சிம்ஹா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சற்றும் எதிர்பாராமல் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளியான தகவலில் தான் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

கைவசம் பல படங்களை வைத்திருக்கும் விக்ரம் எதற்காக வில்லனாக நடிக்க வேண்டும்? என்ற கேள்வி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில். யாரோ கிளப்பி விட்ட வதந்தி எனவும் கூறுகின்றனர். வதந்தி கிளம்புவதற்கும் ஒரு நியாயம் வேண்டாமா?

Continue Reading
To Top